‘தேசிய முன்னணியைக்  கலைக்கும் திட்டமில்லை’

கோலாலம்பூர்: மலேசியாவின் தேசிய முன்னணியில் இப் போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என்று நேற்று அதன் உயர்மட்டத் தலைவர்களிடையே நடைபெற்ற கூட்டத்திற்குப் பின் முடிவானது. நேற்று காலை சுமார் 11 மணியளவில் தேசிய முன்னணி யின் தலைமையகத்தில் கூட்டம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது.
 கூட்டத்தின் முடிவில் பல்லின எதிர்க்கட்சிக் கூட்டணியான தேசிய முன்னணியைக் கலைக்கத் தலைவர்கள் கருத்து உடன்பாடு கொள்ளவில்லை.
சென்ற ஆண்டின் பொதுத் தேர்தலில் ஆட்சியிலிருந்து விலக்கப்பட்ட தேசிய முன்னணி,  நடத்தியுள்ள முதல் கூட்டம் இது என்றும் இதில் நிலவி வரும் கூட் டணி கொஞ்சங்கூட சிதை வுறாமல் இருக்கப்போகிறது என் றும் அதன் இடைக்காலத் தலை வர் முகம்மது ஹசான் கூறினார்.
பல ஆண்டுகளாக இருந்து வரும் இக்கூட்டணி பெரும்பாலும் அம்னோ கட்சியால் ஆக்கிரமிக்கப் பட்டு வந்தது.