ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயாராகக்கூடும்

பியோங்யாங்: வடகொரியத் தலை நகர் பியோங்யாங்கிற்கு அருகில் உள்ள அணுவாயுதத் தளத்தில் இருந்து ஏவுகணையைச் செலுத்து வதற்கான பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருவதை ஆக அண் மைய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
பியோங்யாங்கிற்கு அருகில் உள்ள சானும்தொங் என்ற அந்த இடத்தில்தான் வடகொரியா தனது பெரும்பாலான ஏவுகணைகளையும் அணுவாயுதங்களையும் வைத்து உள்ளது.
வடகொரியாவின் சோஹே பகுதியிலுள்ள அந்நாட்டின் முக்கிய ஏவுகணை ஏவுதளம் மறு படியும் கட்டப்பட்டு வருவதாக அண்மையில் செய்திகள் இடம் பெற்ற நிலையில், இந்தப் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
வடகொரியா மீண்டும் அணு வாயுதப் பாதைக்குத் திரும்பினால் அது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“இரு நாடுகளுக்கிடையே புரிதல் இல்லாத ஒன்றை கிம் ஜோங் உன் செய்தால், எதிர்மறை யான ஆச்சரியத்தை அது எனக்கு வழங்கும். எனினும், என்ன நடக் கப்போகிறது என்று பார்ப்போம்,” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ள கொரியப் போர் நினைவு அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வடகொரிய ஏவுகணைகள். படம்: இபிஏ