‘வர்த்தகப் பேச்சுவார்த்தைக்காக சீனா செல்ல டிரம்ப் நிர்வாகத்திற்கு திட்டமில்லை’

வா‌ஷிங்டன்: அமெரிக்கா, சீனா இவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்து வதன் தொடர்பில் சீனாவுக்கு குழு ஒன்றை அனுப்ப டிரம்ப் நிர் வாகத்தினர் திட்டம் எதையும் வகுக்கவில்லை என்று வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் கிளெட் வில்லம்ஸ் தெரிவித்து உள்ளார். 
இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் தொடர்பான உடன் பாட்டை எட்டுவதில் இன்னும் கணிசமான அளவு பணி உள்ள வேளையில் அவரது கருத்து வெளிவந்துள்ளது.
“சீன அதிகாரிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இருந்தாலும் அவர் களைச் சந்திப்பதன் தொடர்பில் இன்னும் திட்டம் வகுக்கப்பட வில்லை,” என்று செய்தியாளர் களிடம் அவர் கூறினார்.
வர்த்தகம் குறித்த பேச்சுவார்த் தைகளில் முன்னேற்றம் ஏற்பட்ட தால் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீதான வரி விதிப்பை வரையறுக்கப்படாத காலகட்டத்திற்கு ஒத்திவைக்கப் போவதாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது. அந்த வரி விதிப்பு இம்மாதம் 2ஆம் தேதி நடப்புக்கு வரவிருந்தது.