அன்வார்: அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் தலைமைத்துவம் தேவை

கோலாலம்பூர்: மலேசியப் பொருளியல் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதிலும் மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய திட்டங்களை வகுப்பதிலும் மத்திய அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன அரசியலைக் கையில் எடுத்துக்கொண்டுள்ள அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் வளர்ச்சியை இதன் வாயிலாக தவிர்க்க முடியும் என அவர் தெரிவித்தார்.
“ஒருங்கிணைக்கப்பட்ட நம்பிக்கைக் கூட்டணி நமக்குத் தேவை. மக்களின் துன்பங்களையும் பொருளியல் சிக்கலையும் கையாளுவதில் இனம் மற்றும் சமயத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் ஆறுதலளிக்கும் ஒரு தலைமைத்துவம் தேவைப்படுகிறது,” என அவர் சொன்னார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’