ஆற்றில் ரசாயனக் கழிவை வீசியவர்களைத் தேடும் ஜோகூர் காவல்துறை

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங் வட்டாரம் அருகில் சுங்கை கிம் கிம் ஆற்றுப்பகுதியில் ரசாயனக் கழிவு கொட்டப்பட்டது குறித்து ஜோகூர் காவல்துறையிடம் நேற்று நிலவரப்படி குறைந்தது ஐந்து புகார்கள் அளிக்கப்பட்டன.
அப்பகுதியில் வசிக்கும் குடி யிருப்பாளர்களும் இந்தச் சம்ப வத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அந்தப் புகார்களை அளித்திருப்பதாக ஜோகூர் காவல்துறை தலைவர் முகம்மது கலில் காதர் முகம்மது கூறினார்.
“சுற்றுச்சூழல் துறை கட்டுப் பாட்டின்கீழ் இந்த விவகாரம் வந்தாலும் காவல்துறையும் இதை விசாரிக்கும்.
“ரசாயனக் கழிவை ஆற்றில் கொட்டியவர்களை வலைவீசி தேடிப் பிடிப்போம். பொது மக்களின் உயிருக்கு அவர்கள் ஆபத்தை விளைவித்ததோடு ஆற்று நீரையும் மாசுபடுத்தி உள்ளனர்,” என்று காவல்துறை தலைவர் முகம்மது கலில் சொன்னார்.