மலேசியாவில் பெரும் தாக்குதல் அச்சம் நிலவிய சூழலில் தீவிரவாத சந்தேகநபர்கள் 9 பேர் கைது

பல நாடுகளில் பெரிய அளவில் தாக்குதல்களை அரங்கேற்றவதற் கான சதித்திட்டங்களில் ஈடுபட்டு இருப்பதாக நம்பப்படும் இஸ்லாமிய தீவிரவாத சந்தேகப்பேர்வழிகள் ஏழு பேரை மலேசியா திருப்பி அனுப்பிவிட்டது. அவர்களை அது கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. 
அந்த ஏழு பேரில் ஆறு பேர் எகிப்தியர்கள். ஒருவர் துனீசியா நாட்டைச் சேர்ந்தவர். 20 முதல் 50 வரை வயதுள்ள அந்த நபர்கள், இந்த மாதத் தொடக்கத்தில் மலே சியாவில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரில் அடங்குவர். 

மலேசிய போலிசாரின் வேவுத் துறை, பயங்கரவாத எதிர்ப்பு நட வடிக்கைகளின் பகுதியாக அந்த ஒன்பது பேரையும் மடக்கிப் பிடித் தது. கோலாலம்பூர், சிலாங்கூர், சரவாக் ஆகிய பகுதிகளில் பிப்ர வரி 2 முதல் 9 வரை மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் சிக்கினர்.
வடக்கு ஆப்பிரிக்காவில் செயல்படும் அல்கொய்தா தீவிர வாதக் கட்டமைப்பைச் சேர்ந்த அல்-ஷரியா அல்-துனீசியா குழு மத்தின் உறுப்பினர்களான பல சந்தேகநபர்கள் மலேசியாவில் இருப்பதாக வேவுத்துறைக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து போலிசின் சிறப்புப் படைப் பிரிவு நடவடிக்கை எடுத்தது.