மியன்மார் தாக்குதலில்  9 போலிஸ்காரர்கள் பலி   

யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் போராளிகள் நடத்திய தாக்குதலில் போலிஸ்காரர்கள்     9 பேர் கொல்லப்பட்டதாக மூத்த   போலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ராக்கைன் மாநிலத்தில் அடிக்கடி இன மற்றும் சமயக் கலவரம் நடப்பதால் அங்கு பதற்றம் நீடிக்கும் வேளையில் அங்குள்ள ஒரு கிராமத்தில் போலிசாரைக் குறிவைத்து  போராளிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக அந்த அதிகாரி சொன்னார்.
அத்தாக்குதலில் போலிஸ்காரர் கள் 9 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயம் அடைந்ததாகவும் இன்னும் ஒருவரைக் காணவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.
அந்த போலிஸ் நிலையத் திலிருந்து ஆயுதங்களையும் போராளிகள் அபகரித்துச் சென்ற தாகவும் கூறப்படுகிறது.
அத்தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. 
ராக்கைன் மாநிலத்தில் உள்ள மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருவதாகக் கூறி வரும் அரகான் ராணுவம் எனும் போராளிகள் குழு அண்மைய மாதங்களில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து பல தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதனால் அரகான் ராணுவத் தைச் சேர்ந்த போராளிகள் மீது ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. போராளிகளின் இலக்குகள் மீது ராணுவம் குண்டு களை வீசித் தாக்கி வருகிறது.