தட்டம்மை பரவுவதைத் தடுக்க மடகாஸ்கர், நியூசிலாந்து நடவடிக்கை  

மெல்பர்ன்: மடகாஸ்கரில்  தட்டம்மை தொற்றுநோயால் பல சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அங்கு தடுப்பூசி வசதிகள் அதிகம் இல்லாததாலும் ஊட்டச் சத்து குறைவாலும் சிறுவர்களுக்கு இந்த தொற்று நோய்க்கிருமி   வெகுவாகப் பரவுவதாகக் கூறப் படுகிறது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் மடகாஸ்கரில் கிட்டத்தட்ட 1,000 சிறுவர்கள் மரணம் அடைந்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட 2 வயதுச் சிறுமியை  அச்சிறுமியின் தாயார் உரிய நேரத்தில் மருத்துவ நிலையத்திற்கு கொண்டுவந்ததால் அச்சிறுமியைக் காப்பாற்ற முடிந்தது என்று மருத்துவர் ஒருவர் கூறினார்.
அந்தத் தாய் அவரது வீட்டிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ நிலையத்திற்கு தன் மகளைக் கொண்டுவந்து சேர்த்ததாக அந்த மருத்துவர் கூறினார். 
கடந்த செப்டம்பர் மாதத்திற்கும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற் கும் இடைப்பட்ட காலத்தில் மடகாஸ்கரில் 79,000 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருந்த தாகவும் இவர்களில் 926 பேர் மரணம் அடைந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித் துள்ளது.