நான்கு மாநிலங்களில் பாஸ் கட்சியுடன்  கூட்டாட்சி அமைக்க அம்னோ திட்டம் 

கோலாலம்பூர்: பெர்லிஸ், பாகாங், கிளந்தான், திரெங்கானு ஆகிய நான்கு மாநிலங்களில் பாஸ் கட்சியுடன் கூட்டு அரசாங்கத்தை அமைக்க அம்னோ விருப்பம் தெரிவித்துள்ளது.
  அம்னோ கட்சியின் இடைக்கால தலைவர் முகம்மது ஹசான் இத்திட்டம் பற்றி அறிவித்துள்ளார்.
  இந்த ஆலோசனைத் திட்டம் பாஸ் கட்சியின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தத் திட்டம் இன்னும் உத்தேச அடிப்படையில்தான் இருந்து வருகிறது என்றும் இதுகுறித்து மேலும் விவாதிக்கப் பட வேண்டியிருப்பதாகவும் அவர் சொன்னார். அம்னோ தரப்பில் இத்திட்டம் பற்றி ஆராய  தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் முகம்மது ஹசான் கூறினார்.பெர்லிஸ், பாகாங் ஆகிய மாநிலங்கள் அம்னோ ஆட்சியில் இருக்கும் நிலையில் கிளந்தானும் திரெங்கானுவும் பாஸ் கட்சி வசம் உள்ளன. 
 கேமரன் மலை  மற்றும் செமினி தொகுதிகளில் கடந்த ஜனவரி மற்றும் மார்ச் 2ஆம் தேதி நடந்த இடைத் தேர்தலில் அம்னோ கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவ்விரு கட்சிகளும் சேர்ந்து பணியாற்று வதற்கு முறையாக ஓர் உடன்பாடு காண அக்கட்சிகள் இணக்கம் கண்டன.  
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்
நியூசிலாந்தில் மிக உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்றான ‘ஒயிட் ஐலண்ட்’ நேற்று திடீரென புகையையும் சாம்பலையும் கக்கியது. 
படம்: டுவிட்டர்/மைக்கல் ஷேட்

நியூசிலாந்தில் மிக உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்றான ‘ஒயிட் ஐலண்ட்’ நேற்று திடீரென புகையையும் சாம்பலையும் கக்கியது.
படம்: டுவிட்டர்/மைக்கல் ஷேட்

09 Dec 2019

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு; ஐவர் உயிரிழப்பு, பலர் காயம்

கடந்த ஆண்டில் இந்த பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர் பிலிப்பீன்ஸ் நாட்டை சேர்ந்த கெட்ரினா கிரே (வலது). இவ்வாண்டின் வெற்றியாளரான தென் ஆப்பிரிக்காவின் சோசிபினி துன்சிக்கு அவர் மகுடம் சூட்டினார். படம்: ராய்ட்டர்ஸ்

09 Dec 2019

தென் ஆப்பிரிக்க நங்கை இவ்வாண்டின் பிரபஞ்ச அழகி

ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவாளர்கள் தங்களின் ஐந்து கோரிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் கைகளை உயர்த்தியவாறு நேற்றைய பேரணியில் பங்கேற்றனர். படம்: இபிஏ

09 Dec 2019

ஆர்ப்பாட்டங்களின் ஆறுமாத நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பேரணி