ஆஸ்திரேலிய ஆளும் கூட்டணி 50வது முறையாகக் கருத்துக்கணிப்பில் தோல்வி

ஆஸ்திரேலியாவின் பழமைவாத அரசாங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்று பிரபல கருத்துக்கணிப்பில் இன்று தெரியவந்துள்ளது.

நாட்டின் பொருளியல் குறித்த கவலைக்கிடமான செய்தியால் பிரதமர் ஸ்காட் மொரிசனுக்கு ஆதரவு குறைந்திருப்பது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதுவரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து 50வது தடவையாக ஆளும் தேசிய கூட்டணி தோல்வியுற்றது.

எதிர்க்கட்சியான பாட்டாளிக்கட்சி 54% ஆதரவைப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தேர்தல் உடனே நடத்தப்பட்டால் பாட்டாளிக்கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிகிறது.

மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் பட்சத்தில், கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆட்சி மாறக்கூடிய வாய்ப்பைப் பிரதிபலிக்கின்றன.