கிம் ஜோங் நாம் கொலை வழக்கு பல மாத ஒத்திவைப்புக்குப் பிறகு தொடர உள்ளது

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் உறவினர் கிம் ஜோங் நாமைக் கொலை செய்ததாக நம்பப்படும் இரு பெண்களுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று தொடங்கவுள்ளது.

அவர்கள் இருவரும் கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்ததற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கிறது என்று ஆறு மாதங்களுக்குப் பின்னர் நீதிபதி கூறியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம் ஜோங் நாமின் முகத்தில் ‘VX nerve agent’ எனும் ரசாயனம் எறியப்பட்டதாக சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

முப்பது வயது வியட்னாமிய பெண் டோவான் தி ஹுவாங், 27 வயது இந்தோனீசிய பெண் சிட்டி ஆயிஷா இருவரும் அந்த ரசாயனத்தைக் கையாண்டதாக அந்தப் பதிவில் தெரியவந்துள்ளது.  

ரசாயனப் போரில் ராணுவத்தினர் பயன்படுத்துவதற்காக அந்தப் பேரழிவு ஆயுதம் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரைக் கொல்லும் விஷமாக அது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இரு பெண்களும் இந்தக் கொலை சம்பவத்துடன் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்றும் தொலைக்காட்சி தொடருக்காக அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வடகொரியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.