லண்டனில் இந்தியத் தூதரகத்தின்முன் அமைதி ஆர்ப்பாட்டம் கைகலப்பில் முடிந்தது

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின்முன் கடந்த சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் இரு பிரிவினருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டனைச் சேர்ந்த காஷ்மீரி, காலிஸ்தான் அமைப்பினர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்னால் இந்தியாவுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். அப்போது பிரிவினைவாத ஆதரவாளர்களுக்குப் போட்டியாக அதே பகுதியில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆதரவாக முழக்கமிட்டனர்.

அந்நிலையில், அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டம் திடீரென இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பாக உருவெடுத்தது. இந்தத் தகவலை ஸ்காட்லண்ட் யார்ட் போலீசார் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.