சுடச் சுடச் செய்திகள்

போயிங்-737 மேக்ஸ் 8 விமானங்களின் பாதுகாப்பில் சந்தேகம்

கென்ய தலைநகர் நைரோபிக்குச் சென்ற எத்தியோப்பிய விமானம் தரையிலிருந்து பறக்கத் தொடங் கிய ஆறு நிமிடங்களில் விபத் துக்குள்ளாகி நொறுங்கி விழுந் தது. இவ்விபத்தில் 8 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர்.
போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் புதிதாகத் தயாரிக்கப் பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதே ரகத்தைச் சேர்ந்த லயன் ஏர் விமானம் ஒன்று கடந்த அக்டோபர் மாதம் இந்தோ னீசியாவில் விழுந்து நொறுங்கி யதில் 189 பேர் மாண்டனர். பறக்கத் தொடங்கிய 13 நிமிடங் களில் அவ்விபத்து நேர்ந்தது.
இரு ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களும் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியதால் அதன் பாதுகாப்பு மீது உலகளாவிய சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ரக விமானங்களுக்கு சீனா உடனடியாகத் தடை விதித் துள்ளது. அந்தத் தடை நேற்றுக் காலை முதல் நடப்புக்கு வந்தது. பாதுகாப்பை உறுதி செய்த பின் னர் அவற்றை மீண்டும் இயக்க லாம் என சீன விமானப் போக்கு வரத்து அமைச்சு கூறியுள்ளது.
இந்நிலையில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களை தான் இதுவரை பயன்படுத்தியதில்லை என்று மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.