மலேசியா விடுவித்த இந்தோனீசிய மாது  நாடு திரும்பினார்

மலேசிய நீதிமன்றத்தால் விடுவிக் கப்பட்ட இந்தோனீசிய மாது நேற்று மாலை தமது சொந்த நாட் டுக்குத் திரும்பிச் சென்றார். 
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோம் நாம் கொலை வழக்கில் சந்தேக நபரான சித்தி ஆயிஷா என்னும் அந்தப் பெண் ணுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டார்.
மலேசிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சிறிது நேரத்திலேயே சிறையிலிருந்து அவர் விடுவிக்கப் பட்டார். இந்தோனீசிய சட்ட, மனித உரிமைகள் அமைச்சர் யசோன்னா லாவ்லியுடன் அவர் ஜகார்த்தாவின் ஹாலிம் பெர்டனாகுசுமா அனைத் துலக விமான நிலையத்திற்குச் சென்றார்.
திருவாட்டி சித்தி மீது வழக்குத் தொடர வேண்டாம் என கடந்த வெள்ளிக்கிழமை மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி உத்தரவு ஒன்றை பிறப்பித்ததாக கோலாலம் பூரில் உள்ள இந்தோனீசிய தூதர கம் நேற்று கூறியது.
மலேசியாவுக்கும் இந்தோனீசி யாவுக்கும் இடையிலான நல்லுற வின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட் டது. 
இந்தோனீசியாவோடு அணுக்க உறவில் இருக்கும் மலேசிய அர சாங்கத்தின் ஒத்துழைப்பின் கார ணமாக இந்த விடுதலை நிகழ்ந் திருப்பதாக இந்தோனீசிய தேசிய போலிஸ் பேச்சாளர் டெடி பிரசெட் யோ கூறினார்.
2017 பிப்ரவரியில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக டோவன் தி ஹுவோங், 30, என்னும் வியட்னாமியப் பெண் ணுடன் கைது செய்யப்பட்ட திரு வாட்டி சித்தி, 26, மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய முன்னாள் பேரரசர் சுல்தான் முகம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த ரிஹானா ஒக்சானா தம்பதியின் திருமண வாழ்க்கை ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. படம்: ரிஹானா/இன்ஸ்டகிராம்

21 Jul 2019

மலேசிய முன்னாள் பேரரசர், ரஷ்ய முன்னாள் அழகி தம்பதியின் விவாகரத்தை உறுதிசெய்த சிங்கப்பூர் வழக்கறிஞர்