மகாதீர்: புதிய அமைச்சர்களுக்கு அவகாசம் கொடுங்கள்

கோலாலம்பூர்: பக்கத்தான் ஹரப் பான் கூட்டணியின் அமைச்சர்கள் சிலர் புதியவர்கள் என்பதால் அவர்கள் சிறப்பாகச் செயல்பட போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
“புதிய அமைச்சர்கள் சில சம யம் கூட்டணி அரசாங்கத்தைத் தவறாகக் காட்டும் வகையில் பேசி விடுகிறார்கள். ஆனால், நீங்கள் அவர்களுக்குப் போதிய அவகாசம் கொடுக்க வேண்டும். முன்னைய தேசிய முன்னணி அரசாங்கம் எங்களுக்கு எதிராக 60 ஆண்டு கள் செயல்பட்டார்கள். 

“தேசிய முன்னணியில் இருந்த அமைச்சர்கள் அனைவரும் நிபு ணர்கள் அல்ல. அவர்களில் சிலர்  முட்டாள்தனமான தவறுகள் செய் திருக்கிறார்கள், அவர்களின் பிர தமர் உட்பட,” என்று டாக்டர் மகா தீர் நேற்று மலேசிய நாடாளுமன்றத் தின் 14வது கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வின் முதல் கூட்டத்துக்கு முன் செய்தியாளர் களிடம் பேசினார்.
இதற்கிடையே, ஊடகம் தொடர் பில் அமைச்சர்கள் கூறும் பதில் களுக்காக டாக்டர் மகாதீர் அவர் களைக் குறை கூறவில்லை.
“சில சமயங்களில் ஒரு குறிப் பிட்ட விவகாரம் தொடர்பில்  அமைச்சர்களிடமிருந்து பதில் கிடைக்க வேண்டும் என்று நோக் கத்தில் அவர்களுக்கு செய்தி யாளர்கள் அழுத்தம் கொடுப் பார்கள்.
“அந்த அழுத்தத்தில் அவர்கள் பதில் கூறி, அதில் கருத்து பிழை இருந்தால் அவர்கள் புதியவர்கள் என்று குறை கூறுகிறார்கள்,” என் றும் மலேசியப் பிரதமர் விவரித்தார்.