‘பத்துமலை கோயில் தலைவருடையதில்லை’

பெட்டாலிங் ஜெயா: அறை ஒன்றில் குவிந்து கிடக்கும் பணத்தை மலேசியாவில் உள்ள பத்துமலை கோயிலின் தலைவர் ஆர். நடராஜாவுடன் தொடர்புபடுத்தும் காணொளி சமூக ஊடகத்தில் பரவி வருகிறது. 
இந்நிலையில், அந்தக் காணொ ளியில் காட்டப்படும் பணத்துக்கும்  திரு நடராஜாவுக்கும் தொடர் பில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் அந்த 29 வினாடி காணொளி, கத்தை கத்தையாகப் பணத்தைக் காட்டுகிறது. அவை அனைத்தும் பிரிட்டிஷ் பவுண்ட். காணொளியில் தெரியும் சில நோட்டுகள் தீயில் கருகியுள்ளன.  

வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் அந்தக் காணொளி யுடன் கெமரன் மலையில் இருக்கும் ஆடவர் ஒருவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 4 பில்லியன் பவுண்ட் என்ற தகவலும் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப் பட்டது. 
அந்த வீடு பத்துமலை கோயில் தலைவர் ஆர். நடராஜாவுடையது என்று அந்த வாட்ஸ்அப் தகவலில் தெரிவிக்கப்பட்டது. 
போலிசார் அந்த வீட்டில் சோதனையிட நுழைந்தபோது திரு நடராஜாவின் மனைவி அந்த நோட்டுகளை எரிக்க முயன்ற தாகவும் ஆனால் நோட்டுகள் அனைத்தையும் அவரால் எரிக்க முடியவில்லை என்றும் பொய்யான தகவல் அனுப்படுவதாக தெரி விக்கப்பட்டது. 

அத்துடன் நின்றுவிடாமல் அந்தப் பணம் மலேசிய மக்களின் வரிப் பணம் என்று வாட்ஸ்அப் தகவலில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, அந்தத் தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
‘கூகல் ரிவர்ஸ் இமேஜ் சர்ச்’ மூலம் அந்தக் காணொளி முன்பு ஒருமுறை நைஜீரிய மோசடிக்காரர் களுடனும் நைஜீரியா, கெமரரூன், இத்தாலி ஆகிய நாடுகளில் ஊழலில் ஈடுபட்ட தலைவர் களுடனும்  கொலைக் குற்றத் துக்காகக் கைது செய்யப்பட்ட ரஷ்ய செனட்டர் ஒருவருடனும் தொடர்புபடுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.