மலேசிய அமைச்சர் மணமுடித்தார்

மலேசியாவின் எரிசக்தி, தொழில்நுட்பம், அறிவியல், பருவநிலை மாற்றம், சுற்றுப்புற அமைச்சர் யோ பீ யின்னின் திருமணம் நேற்று அதிகாரபூர்வமாக நடைபெற்றது.

‘ஐஓஐ புரோபர்டீஸ்’ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ யாவ் செங்கை அமைச்சர் யோ கரம்பிடித்தார்.

அந்தப் புதுமணத் தம்பதியினரின் திருமணப் பதிவு நேற்று நடைபெற்றதையொட்டி அதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வந்தன.

தம்பதியினரின் பெற்றோர்களின் முன்னிலையில் திருமணப் பதிவு நடைபெற்றது.

லெ மெரிடியன் புத்ராஜெயாவில் இம்மாதம் 29ஆம் தேதி திருமண விருந்து உபசரிப்பு நடைபெறும்.

பிரபல மலேசிய தொழிலதிபர் லீ ‌ஷின் செங்கின் இளைய மகன் தான் அந்த 40 வயது மணமகன்.

மலேசியாவின் புதிய அமைச்சரவையில் இளையர்கள் அங்கம் வகிப்பதால் திருமணமாகாதவர்கள் சிலர் உள்ளனர். ஆக, அமைச்சர்களின் திருமணம் நடப்பது அரிய ஒன்று.