நஜிப் ரசாக் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: 1எம்டிபியின் முன் னைய துணை நிறுவனம் தொடர் பிலான குற்றச்சாட்டை எதிர்த்து முன்னாள் பிரதமர் நஜிப் தாக்கல் செய்த மேல்முறையீடு மீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இம்முறை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதற்கு வளர்ப்பு நாய் காரணமாக இருந்துள்ளது.
மூவர் அடங்கிய மேல்முறை யீட்டு அமர்வு முன்பு பேசிய திரு நஜிப்பின் வழக்கறிஞர் முஹமட் ஷஃபி அப்துல்லா, இடதுகை மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டுள்ளதால் தம்மால் வழக்கைத் தொடர முடியாது என்றார்.
“என்னுடைய வளர்ப்பு நாய் என் மீது பாய்ந்தது. இதனால் எனக்கு வலி ஏற்பட்டுள்ளது. ஊடுகதிர் சோதனைக்குப் பிறகு உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்,” என்று வழக்கறிஞர் சொன்னார்.
இதற்கு தலைமைச் சட்ட அதிகாரி டாமி தாமஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
“எல்லாரும் வழக்கை உடனே தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இதனால் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி யிருக்கின்றனர். எதிர்தரப்பு வழக்கறிஞரின் பிரச்சினை எங்களுக்குப் புரிகிறது.  ஆனால் ஏன் இன்னமும் விசாரணை தொடங்கவில்லை என்ற கேள்வி யும் எழுகிறது,” என்று திரு தாமஸ் குறிப்பிட்டார்.