ஆஸ்திரேலிய கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியாரான ஜார்ஜ் பெல், சிறார்களுக்கு எதிராகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990களின் பிற்பகுதியில், 13 வயது சிறுவர்கள் இருவரிடம் பாலியல் ரீதியாகத் தவறான முறையில் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போப் பிரான்ஸிசின் முன்னாள் நிதி அமைச்சரான கார்டினல் பெல், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறையில் இருந்தபிறகே பிணை பெற அனுமதிக்கப்படுவார் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள 77 வயதான கார்டினல் பெல், தீர்ப்பை எதிர்த்து ஜூன் மாதத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.