மரண தண்டனைக்கு மாற்று: பரிந்துரைக்கத் தயாராவதாக மலேசியா தகவல்

பயங்கரவாதம், படுகொலை உள் ளிட்ட 11 விதமான குற்றங்களுக்கு விதிக்கப்படும் கட்டாய மரண தண்டனையை ஒழிக்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 
இதன் தொடர்பிலான பரிந்துரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மலேசிய பிரதமர் அலுவலக துணை அமைச்சர் முகம்மது ஹனிபா மைதீன் நேற்று தெரிவித்தார்.
தண்டனைச் சட்டம் மற்றும் துப் பாக்கிப் பயன்பாட்டுச் சட்டத்தின்கீழ் விதிக்கப்படும் கட்டாய மரண தண்டனைக்கு மாற்றான தண் டனைக்கு அரசாங்கம் பரிந் துரைக்கும் என்றும் நேற்று மலேசிய நாடாளுமன்றத்தில் அவர் தெரி வித்தார். 

இதுதொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் அப்துல்லா மாட் நவி எழுப்பிய வினாவுக்குப் பதிலளித்த அவர், பக்கத்தான் ஹரப்பான் கடந்த ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதிகளுள் மரண தண்டனை ஒழிப்பும் ஒன்று என்றார். இருந்தபோதிலும் மரண தண் டனை ஒழிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைக்க முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என் றும் திரு அப்துல்லா கூறினார்.
“இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே பரிந்துரையைச் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளோம். அதற்கு முன்னதாக மூன்று முக்கிய தெரிவுகளின் மீதான அரசாங்கத்தின் முடிவுக்காக காத் திருக்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.