அமைச்சர் உறுதி: மலேசிய ஏர்லைன்ஸ் மூடப்படாது

அமைச்சர் உறுதி: மலேசிய ஏர்லைன்ஸ் மூடப்படாது

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய ஏர் லைன்ஸ் விமானப் போக்குவரத்து நிறுவனத்தை மூடமாட்டோம் என்று மலேசிய நிதியமைச்சர் லிம் குவான் எங் உறுதியளித்து உள்ளார். அந்த விமான நிறுவனம் தொடர்பில் பிரதமர் மகாதீர் முகம்மது நாடாளுமன்றத்தில் கூறியது தவறாகப் புரிந்துகொள் ளப்பட்டதாக திரு எங் கூறினார். "மலேசிய ஏர்லைன்ஸ் தொடர் பாக நிபுணர்கள் முன்வைத்துள்ள பல்வேறு தெரிவுகள் குறித்தே டாக்டர் மகாதீர் பேசியிருந்தார். அதை மூடவுள்ளதாக அவர் கூறவில்லை," என்றார் திரு எங். நிதிப் பிரச்சினையில் சிக்கி உள்ள அவ்விமான நிறுவனத்தை மூடுவது உள்ளிட்ட பல யோச னைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகச் சொல்லப்பட்டது.