சுடச் சுடச் செய்திகள்

வெடிபொருளை வெடிக்கச் செய்து தாயும் மகளும் பலி

ஜகார்த்தா: இந்தோனீசிய போலிஸ் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின்போது ஐஎஸ் போராளியின் மனைவி என நம்பப்படுபவர் வெடிபொருளை வெடிக்கச் செய்ததில் அப்பெண் ணும் அவரின் குழந்தையும் மாண்டுபோயினர். இச்சம்பவத் தில் போலிஸ்காரர் ஒருவரும் காயமடைந்தார்.
அந்தப் பெண்ணின் கணவர் என நம்பப்படும் ஹுசைன் என்ற அபு ஹம்ஸா எனும் ஆடவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, வடக்கு சுமத்ராவில் உள்ள சிபோல்கா எனும் நகரத்தில் உள்ள அந்த வீட்டை நேற்று முன்தினம் போலிசார் சுற்றி வளைத்தனர்.

போலிஸ் அதிகாரிகள் அந்த வீட்டினுள் நுழைய முயன்றபோது உள்ளே இருந்த அந்தப் பெண் வெடிபொருளை வெடிக்கச் செய் ததாக நம்பப்படுகிறது.
“எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, அந்தப் பெண்ணும் அவரின் குழந்தையும் மாண்டு விட்டனர்,” என்று இந்தோனீசிய போலிஸ் பேச்சாளர் டேடி பிரசெத்யோ தெரிவித்தார்.
“அந்த வீட்டிற்குள் இன்னும் வெடிபொருட்கள் இருக்கலாம் எனச் சந்தேகப்படுவதால் போலிஸ் அதிகாரிகளால் இன்னும் அத னுள் நுழைய முடியவில்லை,” என்றும் அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்ட ஹுசைன், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப் புடன் தொடர்புடைய ஓர் இயக் கத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுவதாக இந்தோனீசிய போலிஸ் தலைவர் டிட்டோ கர்னாவியன் செய்தியாளர்களி டம் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon