நச்சுப்புகையால் ஜோகூரில் 34 பள்ளிகள் மூடல்

ஜோகூர் பாரு: கிம் கிம் ஆற்றில் கலந்துள்ள வேதிக்கழிவுகளில் இருந்து கிளம்பிய நச்சுப்புகையால் பாசிர் கூடாங் பகுதி பாதிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, அந்த ஆற்றோரமாக அமைந்துள்ள 34 பள்ளிகளை மூடும்படி கல்வி அமைச்சு நேற்று உத்தரவிட்டது.
கூலாய் வட்டாரத்தில் உள்ள கழிவுப்பொருள், வேதிப்பொருள் ஆலைகளிலிருந்து அந்த வேதிப் பொருட்கள் ஆற்றில் கொட்டப்பட்ட தாகவும் அதில் தீங்கு விளைவிக் கும் கன உலோகங்கள் கலந்துள்ள தாகவும் நம்பப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே ஆற்று நீருடன் வேதிப்பொருட்கள் கலந்து ஓடுவதாகச் சொல்லப்படு கிறது. அதில் இருந்து கிளம்பிய நச்சுப்புகை காரணமாக ஜோகூரில் குறைந்தது ஏழு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாண வர்களுக்கு மூச்சுத்திணறலும் மயக்கமும் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 300 பேர் இரண்டு அரசு மருத் துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, வேதிப்பொருட் களை ஆற்றில் கொட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ள சட்ட விரோத டயர் மறுசுழற்சி ஆலை யின் உரிமையாளர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப் படும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ யின் நேற்று தெரிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவ ருக்கு ஐந்தாண்டு வரை சிறையும் 500,000 ரிங்கிட் (S$165,700) அபராதமும் விதிக்கப்படலாம்.