குழந்தைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்: பேராயருக்குச் சிறை

குழந்தைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்: பேராயருக்குச் சிறை

1 mins read

மெல்பர்ன்: தேவாலய இசைக் குழுவைச் சேர்ந்த சிறார் இருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய தாகக் கூறி முன்னாள் வத்திகன் பொருளாளரான கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஆறாண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்தது. போப் பிரான்சிஸின் முன்னாள் தலைமை ஆலோசக ரான பெல், குழந்தை கள் மீதான பாலியல் குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப் பெற்ற ஆக மூத்த கத்தோலிக்க அதிகாரி இவர்தான். இப்போது 77 வய தாகும் பெல் தமது எஞ்சிய ஆயுட்காலத்தைப் பெரும்பாலும் அவர் சிறை யில் கழிக்க நேரிடும் என்று விக்டோரியா நீதிமன்ற நீதிபதி பீட்டர் கிட் தெரிவித்தார். இருந்தாலும், தாம் எந்தக் குற்றமும் செய்ய வில்லை எனத் தொடர்ந்து மறுத்துவரும் பெல், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறினார். மெல்பர்னில் உள்ள செயின்ட் பேட்ரிக் தேவாலயத்தில் பெல் பேராயராக இருந்தபோது 1996ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 1997ஆம் ஆண்டின் தொடக்கத் திலும் 13 வயதுச் சிறார் இரு வருக்கு அவர் பாலியல் தொல்லை தந்ததாகக் கூறப்பட்டது.