நச்சுப் புகையால் ஜோகூரில் 111 பள்ளிகள் மூடப்பட்டன

அண்மை தகவல்களின்படி, தெற்கு ஜோகூர் பாருவிலுள்ள ஓர் ஆற்றில் கலந்த ரசாயனக் கழிவால் மாணவர்கள் உட்பட கிட்டத்தட்ட 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மூச்சு, சுவாசப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

அதுபோக, பாசிர் குடாங் பகுதியில் அமைந்துள்ள 111 பள்ளிகளை மூட கல்வி அமைச்சு நேற்று உத்தரவிட்டது.    

வேதிக்கழிவுகள் கலந்துள்ள சுங்காய் கிம் கிம் ஆறு, சிங்கப்பூரின் புலாவ் உபின் தீவிற்கு அருகே ஜோகூர் நீரிணையோடு இணைகிறது.     

கடந்த சில நாட்களாகவே ஆற்று நீருடன் வேதிப்பொருட்கள் கலந்து ஓடுவதாகச் சொல்லப்படுகிறது.