மணிக்கணக்கில் செயலிழந்த சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்களும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் செயலிகளும் நேற்று மணிக்கணக்கில் செயலிழந்தன.
வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம் ஆகிய செயலிகளையும் சமூக ஊடகமான ஃபேஸ்புக்கையும் பயன்படுத்த முடியாமல்  பெரும்பாலானோர் தவிப்புக்கு ஆளாகி னர். 
நேற்று பின்னிரவு 1.50 மணிக்கு சேவை தடங்கல் குறித்து ஃபேஸ்புக்  நிறுவனம் தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தி யது. 
பேஸ்புக் நிறுவனத்தின் அந்தப் பதிவில், “இந்தத் தடங்கலைச் சரிசெய்வதற்கு ஆன அனைத் தையும் நாங்கள் செய்து வருகி றோம். விரைவில் கோளாறு சரி செய்யப்படும். 
இந்தப் பிரச்சினை இணைய ஊடுருவலால் ஏற்படவில்லை. இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
அதேபோல் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதற்குப் பயன் படுத்தப்படும் செயலியான இன்ஸ்டகிராம் நிறுவனமும் தனது டுவிட்டர் பதிவில் சேவைத் தடை குறித்து அறிவித்திருந்தது.
பல நாடுகளில் இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் பெயர், மறைசொல் ஆகியவற்றைக் கொண்டு புக முடியாமல் போனதாக ஏராளமானோர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தனர்.
ஒரு சில நாட்களுக்கு முன்னர் கூகள் நிறுவனத்தின் ஜிமெயில், கூகள் டிரைவ் போன்ற சேவை களில் தடங்கல் ஏற்பட்டன. 
ஏராளமானோர் மின்மடல் சேவையில் கோப்புகளை இணைக் கவும் கிடைக்கப்பெறும் கோப்பு களைத் திறக்கவும் இயலவில்லை எனப் புகார்  தெரிவித்திருந்தனர்.