‘பாசிர் கூடாங் நச்சுவாயு பிரச்சினையைச் சமாளிக்க அவசரநிலை தேவையில்லை’

மலேசியாவின் ஜோகூர் பாருவின் பாசிர் கூடாங்கில் நச்சுவாயு பிரச்சினையைச் சமாளிக்க அவசர நிலை அறிவிக்கத் தேவையில்லை நேற்று அரசாங்கம் தெரிவித்தது.
ஜோகூர் பாரு மாநில அரசு இதற்குக் கோரிக்கை விடுக்காத தால் அவசரநிலை அறிவிப்பது குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்றும் அது கூறியது.
முன்னதாக அவசரநிலை அறி விப்பது குறித்து நாடாளு மன்றத் தில் விவாதிக்கப்பட இருந் தது. 
இந்த நிலையில் செய்தியாளர் களிடம் பேசிய பிரதமர் அலுவலக துணை அமைச்சர் முகமது ஹனிபா மைதின், அவசர நிலை தேவையில்லை என்று கூறினார்.
நெருக்கடி நிலையைச் சமா ளிக்க ஜோகூர் மாநில அரசுக்கு மத்திய அரசாங்கம் உதவி செய்து வருவதாக அவர் தெரிவித்தார். 
சுங்கை கிம் கிம் ஆற்றில் வீசப்பட்ட 2.43 டன் ரசாயனக் கழிவுகள் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மருத்துவக் கவனிப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’