பிரெக்சிட்: மேயின் 3வது முயற்சி

லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே தனது பிரெக்சிட் திட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்பு தலைப் பெற 3வது முறையாக முயற்சியை மேற்கொள்ளவிருக் கிறார்.
இதன் தொடர்பில் அடுத்த வாரம் நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் களிடையே பேசிய தெரேசா மே, வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வெகுகாலம் தேவைப்படலாம் என்றார்.
தற்போதைய நிலையில் மார்ச் 29ஆம் தேதி அன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும்.
ஆனால் மார்ச் 29ஆம் தேதிக்கு மேல் தாமதப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திடம் அனு மதி கேட்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்து வரு கின்றனர்.
சென்ற புதன்கிழமை அன்று எத்தகைய சூழ்நிலையிலும் ஒப் பந்தம் இல்லாமல் வெளியேறும் திட்டத்தை உறுப்பினர்கள் நிராகரித்து விட்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’