வியட்னாம் பெண்ணுக்கு உடல் நலக்குறைவு; வழக்கு ஒத்திவைப்பு

ஷா ஆலம்: கடந்த 2017ஆம் ஆண்டில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொல்லப்பட்ட வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட வியட்னாம் பெண்ணுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நேற்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரான இந்தோனீசியாவைச் சேர்ந்த சித்தி ஆயிஷா மட்டும் விடு விக்கப்பட்டார். இந்நிலையில் தம்மையும் விடுவிக்கும்படி வியட்னாமியரான டோன் தி ஹுவோங் கேட்டுக் கொண் டார். ஆனால் இதனை மலேசிய தலைமைச் சட்ட அலுவல கம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. ஒரே நேரத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டது உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’