போயிங் ‘737 மேக்ஸ் 8’ விமானங்கள் பறக்காது

வா‌ஷிங்டன்: போயிங் விமான நிறுவனம் அதன் ‘737 மேக்ஸ் 8’ ரக அனைத்து விமானங்களையும் தரையிறக்க நேற்று அதிரடியாக முடிவு செய்தது.
எத்தியோப்பிய விமான விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து புதிய ஆதாரங்களை விசாரணை யாளர்கள் கண்டுபிடித்துள்ளதால் போயிங் இந்த முடிவை எடுத்துள் ளது.
உலகம் முழுவதும் பல்வேறு விமான நிறுவனங்களில் இயக் கப்படும் 371 விமானங்களும் தற் காலிகமாக நிறுத்தப்படும் என்று நேற்று அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் அறிவித்தது.
புதிய ஆதாரத்துடன் புதிய செயற்கைக்கோள் தரவுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறிய மத்திய போக்குவரத்து நிர்வாகம், ‘737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த மிக மோசமான விமான விபத்தில் 157 பயணிகளும் விமானிகளும் சிப்பந்திகளும் மாண்டனர்.