எத்தியோப்பிய விமான விபத்து; விமானத்தை கீழ்நோக்கி பாய்ச்சிய சாதனம் கண்டுபிடிப்பு

வா‌ஷிங்டன்: எத்தியோப்பிய விமானம் நொறுங்கி விழுந்த இடத்திலிருந்து திருகாணி போன்ற சாதனம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனம்தான் விமானம் கீழ் நோக்கிப் பாய்வதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
இதன்பிறகே அனைத்து ‘737 மேக்ஸ் 8’ ரக விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க போயிங் நிறுவனம் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
விபத்து நிகழ்ந்த இடத்தில் குறிப்பிட முடியாத ஆதாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று  மத்திய விமானப் போக்குவரவு நிர்வாகத்தின் தலைவர் டேனியல் எல்வெல் குறிப்பிட்டார்.
விமானத்தின் மூக்குப்பகுதி மேலே ஏறுவதையும் கீழே இறங்கு வதையும் ‘ஜேக்ஸ்குரு’ என்று அழைக்கப்படும் சாதனம் சீர்செய் கிறது.
இந்தச் சாதனம்தான் விபத்தின் போது விமானத்தை கீழ் நோக்கி பாயச்செய்திருக்கலாம் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அதி காரி ஒருவர் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த எத்தியோப்பிய விமான விபத்தில் பயணம் செய்த 157 பேரும் கொல்லப்பட்டனர்.
பிரான்சில் இந்த விமானத்தின் குரல் பதிவு கறுப்புப் பெட்டியை அதிகாரிகள் ஆராய்ந்துவரும் வேளையில் ‘737 மேக்ஸ்’ ரக விமானங்கள் இன்னும் பல வாரங்களுக்கு இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதற்கிடையே கடந்த அக் டோபரில் விபத்துக்குள்ளான லயன் ஏர் விமானத்தின் அறிக் கையை விரைவில் வெளியிட இந்தோனீசிய அதிகாரிகள் தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்ற னர். 
எத்தியோப்பிய விமான விபத்து போன்று லயன் ஏர் விமானமும் விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் 189 பேர் மாண்டனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon