உயிர் தப்பிய கிரிக்கெட் குழு

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் நடந் துள்ள மிகப்பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பங்ளாதேஷ் கிரிக்கெட் குழுவினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள் ளனர்.
வெள்ளிக்கிழமை அன்று பங்ளாதேஷ் குழுவைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்களும் ஊழி யர்களும் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் பள்ளிவாசலுக்குச் செல்லத் திட்டமிட்டனர்.
ஆனால் அங்கு துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக அவர் களுக்குத் தகவல் கிடைத்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பள்ளிவாசலுக்குச் செல் வதைத் தவிர்த்தனர்.
துப்பாக்கிச் சூடு பற்றிய விவரம் தெரியாமல் இருந்தால் அவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படு கிறது. 
இந்நிலையில் மயிரிழையில் உயிர் தப்பிய கிரிக்கெட் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சம்பவம் பற்றி பேசிய பங்ளா தேஷ் கிரிக்கெட் வாரியத்தின் பேச்சாளர் ஜலால் யூனுஸ், “பங்ளா தேஷ் குழுவினர் பாதுகாப்பாக உள்ளனர்,” என்றார்.
“அனைவரும் பேரதிர்ச்சியில் உள்ளனர். ஹோட்டலிலேயே தங்கியிருக்கும்படி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
பங்ளாதேஷ் குழுவில் இடம் பெற்றுள்ள ‘பங்ளாதேஷ் டெய்லி ஸ்டார்’ நாளேட்டின் செய்தியாள ரான மசார் உதின், பள்ளிவாசலி லிருந்து தள்ளியிருக்கும்படி எச் சரிக்கப்பட்டதும் பேருந்தில் இருந்த குழுவினர் படுத்துக் கொண்டனர்,” என்று கூறினார்.
“இப்போதுதான் துப்பாக்கிக் காரனிடமிருந்து தப்பியிருக் கிறோம். இதயம் வேகமாகத் துடிக்கிறது. எல்லா இடத்திலும் அச்ச உணர்வு காணப்படுகிறது,” என்று பங்ளாதேஷ் குழுவின் பகுப் பாய்வாளரான ஸ்ரீனிவாஸ் சந்திர சேகரன் டுவிட்டர் பதிவில் கூறி யிருந்தார்.