நச்சு வாயு கசிவு; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,500க்கு அதிகரிப்பு

பாசிர் கூடாங்: மலேசியாவின் பாசிர் கூடாங்கில் நிகழ்ந்த நச்சு வாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,500க்கு அதிகரித்துள்ளது.
பாசிர் கூடாங் உள்ளரங்கில் உள்ள தற்காலிக மருத்துவ நிலை யத்தில் 780 புதிய சம்பவங்கள் பதிவாகியதால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளது.
இருந்தாலும் மருத்துவ மனையில் 113 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று ஜோகூர் மாநில சுகாதார, சுற்றுச்சூழல், வேளாண்மைக் குழுவின் தலைவர் சஹ்ருதீன் ஜமால் தெரிவித்தார்.
மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்ற தனிப்பட்டவர் களின் எண்ணிக்கை 202.
சுல்தானா அமினா மருத்துவ மனையிலும் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற 531 பேர் வீடு திரும்பி விட்டதாகவும் அவர் கூறினார்.
சுங்கை கிம் கிம் ஆற்றில் சட்ட விரோதமாக வீசப்பட்ட ரசாயனக் கழிவிலிருந்து நச்சு வாயு கிளம் பியதால் 111 பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்  டது.
இந்நிலையில் சுங்கை கிம் கிம் சுற்று வட்டாரத்தைப் பேரிடர் பகுதி யாக அறிவித்து பொதுமக்களை வெளியேற்ற அவசரநிலை பிரக டனப்படுத்தப்படுத்தப்பட வேண் டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால் இதற்கு அவசிய மில்லை என்று அரசாங்கம் தெரி வித்தது.