மகாதீர்:ஜோகூர் முதல்வர் ஒஸ்மான் பாத்தாம் போனது எனக்குத் தெரியாது

புத்ராஜெயா: பாசிர் கூடாங் நச்சு வாயு சம்பவத்தின்போது ஜோகூர் முதல்வர் ஒஸ்மான் சபியான் இந் தோனீசியாவில் உள்ள பாத்தாம் தீவுக்குச் சென்றது பற்றி தமக்குத் தெரியாது என்று பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.
“அவர் போனாரா?, எனக்குத் தெரியாது,” என்று நேற்று நடந்த நிகழ்ச்சியின்போது டாக்டர் மகாதீர் சொன்னார்.
சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஜோகூர் பயணத்துறையை மேம்படுத்தும் ‘ஜோகூருக்கு வாருங்கள் 2020’ எனும் நிகழ்ச் சியில் பங்கேற்க ஜோகூர் முதல் வர் ஒஸ்மான் சபியான் பாத்தா முக்குச் சென்றார். 
அப்போது பாத்தாம் மேயர் முஹமட் ருடி அவரை வரவேற்றார்.
இருப்பினும் முதல்வரின் பயணத்தை பலர் குறைகூறி யுள்ளனர். நச்சு வாயு கசிவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அவர் பாத்தாம் சென்றது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்று சமூக ஊடகங்களில் பலர் சாடியுள்ளனர். 
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கும் ஜோகூர் முதல்வரின் பாத்தாம் பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“சுங்கை கிம் கிம் ஆற்றில் சட்டவிரோதமாக ரசாயனக் கழிவு கொட்டப்பட்டுள்ளது. 
“இந்த மோசமான கால கட்டத்தில் முதல்வர் ஒஸ்மான் வெளிநாடு சென்றிருக்கக் கூடாது,” என்றார்         அவர்.
“2014ல் வெள்ளம் ஏற்பட்ட போது அமெரிக்காவுக்கு விடு முறையில் சென்றதை சுருக்கிக் கொண்டு நாடு திரும்பிய நான் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங் களைப் பார்வையிட்டேன். இதே போல திரு ஒஸ்மானும் தனது வெளிநாட்டுப் பயணத்தை ஒத்தி வைத்திருக்கலாம்,” என்று திரு நஜிப் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் மகா தீரிடம் ஜோகூர் முதல்வரின் பயணம் குறித்து நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த டாக்டர் மகாதீர், “நச்சு வாயு சம்பவத்தை எப்படி கையாள்வது என்பதில் ஒஸ்மானுக்கு தனிப்பட்ட எண் ணம் இருக்கலாம். ஆனால் இந்தப் பிரச்சினை சரியான முறை யில் கையாளப்படுகிறது, அவசரக் காலத்தை அறிவிக்கும் நிலையும் ஏற்படவில்லை,” என்றார்.
2019-03-17 06:00:00 +0800