ஆஸ்திரேலிய செனட்டர் தலை மீது முட்டை வீச்சு

மெல்பர்ன்: கிறைஸ்ட்சர்ச் பள்ளி வாசல்களில் நடத்தப்பட்ட தாக்கு தலுக்கு முஸ்லிம்களே காரணம் என்று கூறியதால் கடும் கண் டனங்களுக்கு உள்ளான ஆஸ் திரேலிய செனட்டர் ஒருவர் நேற்று முட்டைகளால் தாக்கப் பட்டார்.
இந்தச்சம்பவம் தொடர்பில் மெல்பர்ன் ஹாம்ப்டன் புறநகர் வட்டாரத்தைச் சேர்ந்த 17 வயது இளையர் ஒருவரை  விக்டோரியா காவல்துறையினர் கைது செய் துள்ளனர்.
நேற்று பிற்பகல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 69 வயது செனட்டரை அந்த இளையர் முட்டையால் தாக்கியதாக ஆஸ் திரேலிய ஊடகங்கள் தெரி வித்தன.
குவீன்ஸ்லாந்து செனட்டர் ஃபிரேசர் ஆனிங் தமது கன்சர் வேடிவ் கட்சியைச்சேர்ந்த ஆதர வாளர்களைச் சந்திப்பதற்காக மெல்பர்ன் நகருக்கு வந்திருந்தார்.
அப்போது இளையர் ஒருவர் தனது கைத்தொலைபேசியில் படம்பிடித்தபடி திரு ஆன்னிங் தலை மீது முட்டைகளை போட்டு உடைத்தார். 
இதனால் கோபத்துடன் திரும் பிய செனட்டர் ஆன்னிங் அந்த இளையரின் முகத்தில் தாக்கி னார். ஆனால் அதற்குள் அங் கிருந்த ஆதரவாளர்கள் அவரை தடுத்துவிட்டனர்.
இதற்கிடையே அந்த இளையரை அங்கு இருந்த வர்கள் தரையில் அழுத்திப் பிடித்துக் கொண்டனர்.
பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் இளையரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இளையர் ஒருவர் முட்டையால் தாக்கியதால் கோபத்துடன் திரும்பிய செனட்டர் ஆன்னிங், அந்த இளையரைத் தாக்கினார். படம்: news.com.au காணொளி