வீட்டோ மூலம் தடுத்த அதிபர் டோனல்ட் டிரம்ப்

வா‌ஷிங்டன்: மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் அவசர சட்டத்தை எதிர்க்கும் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் மூலம் அமெரிக்க அதிபர் தடுத்து நிறுத்தியுள் ளார். செய்தியாளர்கள் முன் னிலையில் அதிபர் டிரம்ப் வீட்டோ அதிகாரத்தில் கையெழுத்திட்டார். இந்த நிலையில் அதிபரின் வீட்டோ அதிகாரத்தை அனுமதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் வரும் 26ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.