எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்து:  இறுதிச் சடங்கிற்கு கருகிய மண் ஒப்படைப்பு

அடிஸ் அபாபா: எத்தியோப்பி யாவில் இம்மாதம் 10ஆம் தேதி விமான விபத்து நிகழ்ந்த இடத் திலிருந்து எடுக்கப்பட்ட கருகிய மண் மட்டும் இறந்தவர்களின் குடும்பங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.
உயிரிழந்த 157 பேரின் உடல் எச்சங்களை அடையாளம் கண்டு பிடிக்க குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்குகளில் பயன் படுத்தப்படவுள்ள அந்த மண், அவர்களுக்கான கல்லறை களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் புதைக்கப்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. தங்கள் உறவினரை இழந்த ஒவ்வொரு குடும்பத் துக்கும் ஒரு கிலோ மண் கொடுக்கப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட கருகிய மண். 
படம்: ராய்ட்டர்ஸ்