தாய்லாந்து பொதுத் தேர்தலுக்கு முன்கூட்டியே தொடங்கிய வாக்குப்பதிவு

பேங்காக்: தாய்லாந்து பொதுத் தேர்தலில் முன்கூட்டியே வாக்கு அளிப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது.
உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது. 
ஆனால் வாக்குப்பதிவு குறித்த எந்தவொரு முடிவும் நேற்று அறிவிக்கப்படவில்லை.
தாய்லாந்தில் பொதுத் தேர்தல் இம்மாதம் 24ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்பாக சில பகுதிகளில் வாக்களிப்பு முன்கூட்டியே நடத் தப்படுகிறது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற வாக்களிப்பில் நூறு ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக வந்து வாக்களித்ததாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
2014ஆம் ஆண்டில் தாய் லந்தில் ராணுவ ஆட்சி நடப் புக்கு வந்த பின்னர் அங்கு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இது என்பதால் வாக்கா ளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதாக ஆணையம் கூறியது.
இந்தத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 380க்கும் அதிக மான வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாலை 6 மணியிலிருந்து மதுபான விற்பனை மற்றும் விநியோகத்திற் கான 24 மணி நேரத் தடை உத்த ரவை தாய்லாந்து அரசு பிறப் பித்தது. தேர்தல் மோசடி தொடர் பான குற்றங்களைத் தவிர்க்க அத்தகைய தடை உத்தரவு கட்டாயம் தேவை என்று ஆணை யம் சொன்னது.
<P>