ஆபாச படங்களை நீக்க ஃபேஸ்புக் நடவடிக்கை

சான்பிரான்சிஸ்கோ: ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி பதிவேற்றப்படும் ஆபாசப் படங்கள், தகவல்கள், காணொளிகளை நீக்குவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. 
முதலில் அதை சோதனை ரீதியில் பயன்படுத்திப் பார்த்த பின்னர், முழுமையாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.