லொம்போக் தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐவர் உயிரிழப்பு, பலர் காயம்

ஜக்கர்த்தா: இந்தோனீசியாவின் லொம்போக் தீவை நேற்று உலுக்கிய 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது ஐவர் உயிரிழந்ததோடு 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் ஆவர்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்தோனீசியாவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படாவிட்டாலும் அது ஏற்படுத்திய நிலச்சரிவினால் பல வீடுகள் சேதமடைந்தன.