குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் மலேசிய ஆடவர் கைது

குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் மலேசிய ஆடவர் கைது

1 mins read

பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் குழந்தை தொடர்பான பாலியல் காணொளிகளைக் கைபேசியில் வைத்திருந்ததன் பேரில் மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பெர்த் அனைத்துலக விமான நிலையத்தில் அந்த 36 வயது ஆடவர் அங்கிருந்த குடிநுழைவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த விமானத்தில் அந்த ஆடவர் பயணம் செய்ததாகவும் பயணப்பை பரிசோதனை நடவடிக்கையின்போது அவர் பிடிபட்டதாகவும் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஆடவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பரிசோதனை நடவடிக்கையின்போது அவரது கைபேசியில் குழந்தை ஒன்றைப் பாலியல் துன்புறுத்தல் செய்யும் காணொளி இருந்தது தெரிய வந்ததாக அதிகாரிகள் கூறினர். அதனையடுத்து அந்த ஆடவரின் கைபேசி பறிமுதல் செய்யப்பட்டு அவருடைய பயண விசா ரத்து செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அந்த ஆடவர் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை, 525,000 ஆஸ்திரேலிய டாலர் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.