மராவி தாக்குதலில் சம்பந்தப்பட்ட அறுவர் உட்பட 13 சந்தேகப் போராளிகள் மலேசிய தடுப்புக் காவலில்  

தெற்கு பிலிப்பீன்ஸில் உள்ள மராவியில் 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்ட அபு சயாஃப் பயங்கரவாதக் குழுவை ஆதரிக்கும் ஆறு பேர் உட்பட பதின்மூன்று சந்தேகப் போராளிகளை மலேசியா தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

இம்மாதம் 11, 12 தேதிகளில் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த 12 பேரும் ஒரு மலேசியரும் மலேசிய போலிஸ் படையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டதாக தேசிய போலிஸ் தலைவர் முகமது ஃபூஸி ஹாரூன் தெரிவித்துள்ளார்.

சாபாவில் வெளிநாட்டுப் பயங்கரவாதிகளுக்குச் சிலர் அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.

உள்ளூர் பெண்களை மணந்தோ கல்வி வளங்களைப் பயன்படுத்தியோ வணிகம் புரிந்தோ வெளிநாட்டுப் போராளிகள் மலேசியாவில் நிரந்தரமாகத் தங்கியிருக்க திட்டமிடுவதாகப் போலிஸ் படைத் தலைவர் கூறியுள்ளார்.