சுடச் சுடச் செய்திகள்

அமெரிக்க வெள்ளத்தால் இருவர் மரணம், ஒருவரைக் காணவில்லை

அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சம்பவத்தால் இருவர் மரணமடைந்தனர். அதனைத் தொடர்ந்து தலைவர்கள் அவசர நிலையை அறிவித்துள்ளனர். குடிமக்கள் பலர் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

பலமான குளிர்காலக் காற்றுடன் கனமழை பெய்து நீர்மட்டத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

வெள்ளத்தால் பல பகுதிகளில் சாலைகளும் பாலங்களும் அகன்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.  

நெப்ராஸ்கா பகுதியில் 650க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்துள்ளனர்.

வெள்ளத்துடன், கடும் பனி, பலத்த காற்று, உறையும் மழை என இயற்கைப் பேரிடரால் அந்தப் பகுதியே பாதிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon