ஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் காயம்

ஹாங்காங்கின் மத்திய வட்டா ரத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் இரு பெரு விரைவு ரயில்கள் (எம்டிஆர்) சோதனை ஓட்டத்தின்போது மோதிக்கொண் டன. புதிய சமிக்ஞை முறைக்கான சோதனை இடம்பெற்ற வேளையில் ரயில்கள் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. 
இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் ஒருவருக்குக் காலில் காயம் ஏற் பட்டது. மற்றோர் ஓட்டுநர் புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டுப் போலிஸ் தெரிவித்தது. இரு ரயில்களின் ஓட்டுநர்களும் பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் நேற்று காலை உச்சநேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரயில் பெட்டிகளின் கதவுகள் கழன்றுகிடப்பதையும் ரயில் பெட்டி களுக்குள் உடைந்த கண்ணாடி சிதறல்கள் தரையில் கிடப்பதையும் புகைப்படங்கள் காட்டின. 
ரயில் ஒன்று தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு ஒரு பக்க மாகச் சாய்ந்த நிலையில் இருந்த தையும் அந்தப் படங்கள் காட்டின.