நெதர்லாந்து துப்பாக்கிச்சூடு: ஒருவர் மரணம், பலர் காயம்

நெதர்லாந்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள யூட்ரெக்ட் நகரில் பல்வேறு இடங்களில் நேற்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம் அடைந்ததாக அந்நாட்டு போலிஸ் தெரிவித்து உள்ளது. இந்தச் சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி காலை 10.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்தன.
இது குறித்த விசாரணை தொடர்வதால் காயமடைந்தவர் களின் எண்ணிக்கை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று போலிஸ் கூறியது.
அந்தச் சம்பவங்களில் ஒன்றில் தெருக்களின் தண்டவாளங்களில் ஓடும் டிராம் வண்டியில் அரங் கேற்றப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னால் பயங்கரவாத நோக்கம் இருப்பதுபோல தெரிவ தாக அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு கூறியதை உள்ளூர் ஊடகங்கள் சுட்டின.
டிராம் வண்டிக்குள் புகுந்த சந்தேக நபர் ஒருவன் அங்கு இருந்தவர்களை நோக்கி சரமாரி யாக சுடத் தொடங்கியதாக சம்ப வத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி னர். காயமடைந்தவர்களுக்கு அரு கிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. தண்டவாளத்தில் சடலம் ஒன்றின்மீது துணி போற்றப் பட்டதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகின. 
அந்த இடத்தைச் சுற்றி முகமூடி அணிந்து ஆயுதம் ஏந்திய நிலையில் போலிசாரும் அவசர காலப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இச்சம்பவத்தில் ஹெலிகாப்டர் களைக் கொண்டு மீட்புப் பணிகள் நடைபெற்றன.