மலேசியாவில் போராளிகள் கைது

மலேசியாவில் போராளிகள் கைது

1 mins read
0cc0fb6f-9563-41b6-b522-59fbcae5fbb6
PHOTO: COUNTER TERRORISM DIVISION, SPECIAL BRANCH, MALAYSIA -

கோலாலம்பூர்: போராளிகள் என சந்தேகிக்கப்படும் 13 பேரை மலேசிய போலிசார் கைது செய் துள்ளனர். அவர்களில் ஆறு பேர் அபு சாயஃப் பயங்கரவாத அமைப் பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தென்பிலிப்பீன்ஸில் உள்ள மராவியில் நடத்தப்பட்ட தாக்கு தலில் ஈடுபட்டதாகக் கூறப் படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள். ஒருவர் மலேசியர். இம்மாதம் 11, 12 தேதிகளில் சாபா மாநில போலிஸ் படையின் சிறப்புப் பிரிவு, மின்னல்படைப் பிரிவு ஆகியவற்றின் உதவியோடு மலேசிய போலிஸ் படையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் சந்தேக நபர்களைப் பிடித்தனர். "ஏஎஸ்ஜி, ராயல் சூலு படை போன்ற பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் இவர் களுக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. "இதன் காரணமாக இவர் களைக் கைது செய்தோம். அவர்களில் சிலர் சாபாவில் தலைமறைவாக இருக்கும் வெளிநாட்டுப் பயங்கரவாதி களுக்குத் தஞ்சம் அளித்து உள்ளனர்," என்று மலேசிய போலிஸ் படைத் தலைவர் ஃபுசி ஹருண் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த மராவி தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்று மலேசிய போலிசார் சந்தேகிக்கப் படுகின்றனர்.