வியட்னாமில் சிறுவர்களுக்கு நாடாப்பூச்சித் தொற்று

ஹனோய்: வியட்னாமின் வடக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்குக் குடலில் நாடாப் பூச்சித் தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, பள்ளிக் கூடங்களில் வழங்கப்படும் உணவு சுகாதாரமற்றதாக இருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. 
சுகாதாரமற்ற உணவைச் சாப்பிட்டதால் சிறுவர்களுக்குக் குடலில் நாடாப்பூச்சித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப் படுகிறது. 209 சிறுவர்களுக்கு நாடாப்பூச்சி தொற்று ஏற்பட்டிருப் பதாக மருத்துவர்கள் தெரிவித்துள் ளனர். இதுவரை 800க்கும் மேற் பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வியட்னாமில் உள்ள பாலர் பள்ளி ஒன்றில் பணிபுரியும் சமையல்காரர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பன்றி இறைச்சியில் புழுக்களைக் கண்டதாக தெரிவிக்கப்பட்டது.
நாடாப்பூச்சி தொற்று மூளை பாதிப்பு, கண்பார்வை இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடியது.