சுடச் சுடச் செய்திகள்

ஸிம்பாப்வே, மொசாம்பிக்கில் சுழல்காற்று: 100க்கும் மேற்பட்டோர் மரணம்

சிமனிமனி: சக்திவாய்ந்த சுழல் காற்று வீசியதில் மொசாம்பிக்கிலும் ஸிம்பாப்வேயிலும் 100க்கும் மேற் பட்டோர் மாண்டனர். பலரைக் காணவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. சுழல்காற்று காரண மாக இவ்விரண்டு நாடுகளிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஸிம்பாப்வேயின் கிழக்குப் பகுதியில் மரண எண்ணிக்கை 65ஆக உயர்ந்திருப்பதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். சுழல்காற்று காரணமாக மொசாம் பிக்கின் மத்திய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு இதுவரை 48 பேர் மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸிம்பாப்வேயின் சிமனிமனி மாவட்டம் சுழல்காற்றால் ஆக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. பல வீடுகளையும் பாலங்களையும் வெள்ளம் அடித்துக்கொண்டு சென்றதாக சிமனிமனி மாவட்டத் தின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். அந்த மாவட்டத்தில் இதுவரை 65 பேர் உயிரிழந் துவிட்டதாக அவர் கூறினார். கிட்டத்தட்ட 150லிருந்து 200 பேரைக் காணவில்லை என்றார் அவர். பாதிக்கப்பட்ட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் அதிகாரிகளால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதாலும் அடர்ந்த மேகங்கள் சூழ்திருப்ப தாலும் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிமனிமனி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் சிக்கித் தவித்த ஏறத்தாழ 200 மாணவர் கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோரை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon