ஜகார்த்தா: இந்தோனீசியாவின் லொம்போக் தீவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த நிலச்சரிவுகள் காரணமாக இரண்டு பேர் மரணம் அடைந்தனர். 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டு, உள்ளூர் சுற்றுப்பயணிகள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இரண்டு மிதமான நிலநடுக்கங்களை அடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அவர்களில் நிலச்சரிவில் மாண்ட இருவரும் மலேசியர்கள். மலேசியாவின் சீனமொழி நாளிதழான சின் சியூவின் துணைத் தலைமை ஆசிரியர் டாய் சியூ கிம்மும் ஒருவர். நிலச்சரிவு காரணமாக ஏழு மலேசியர்கள் காயமுற்றதாகவும் லொம்போக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
லொம்போக் நிலச்சரிவு: இருவர் பலி
1 mins read
PHOTO: BNPB -

