பாசிர் கூடாங் விவகாரம்: ஒன்பது பேர் கைது

பாசிர் கூடாங்: ஜோகூர் மாநிலத்தில் உள்ள பாசிர் கூடாங் நகரில் இருக்கும் கிம் கிம் ஆற்றில் ரசாயனக் கழிவை வீசிய குற்றத்தின் பேரில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் ஜோகூர் பாருவில் பிடிபட்டதாகவும் ஏனைய ஏழு பேர் ஜோகூர் பாருவுக்கு வெளியே கைது செய்யப்பட்டதாக வும் மலேசியப் போலிஸ் படைத் தலைவர் ஃபுசி ஹருண் தெரி வித்தார். “கைது செய்யப்பட் டோரின் வயதையும் அவர்கள் எங்கு பிடிபட்டனர் என்ற விவரத் தையும் எங்களால் வெளியிட முடியாது. அந்தத் தகவல்களை வெளியிட்டால் அது எங்களது விசாரணைக்கு இடையூறு விளைவிக்கக்கூடும்,”என்றார் திரு ஃபுசி. கைது செய்யப்பட்ட வர்கள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப் படுவர். அவர்களிடம் மலேசிய போலிசார் விசாரணை நடத் துவர். கிம் கிம் ஆற்றில் ரசாயனக் கழிவு வீசப்பட்டதால் நச்சுவாயு காரணமாக அப்பகுதி யைச் சேர்ந்த பல பள்ளி மாண வர்கள் நோய்வாய்ப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.